ஓமான் ஆட்கடத்தல் விவகாரம் குறித்து முறைப்பாடு பதிவு செய்வதற்காக பிரபல கலைஞர் துஷ்யந்த் வீரமன் மற்றும் அவரது மனைவியான ஸ்டெபானி சிறிவர்தன ஆகியோர், குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு இன்று (20) வருகை தந்தனர்.
கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு மற்றும் குடிவரவு அதிகாரிகளால் சனிக்கிழமை (19) கைது செய்யப்பட்டு நீர்கொழும்பு நீதவானினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட சிலருக்கு எதிராக அவர்கள் முறைப்பாடு பதிவுசெய்துள்ளனர்.
துஷ்யந்த் வீரமனின் வீட்டில் சில காலம் பணியாற்றிய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்ட நபரின் சட்டவிரோத நடவடிக்கையால் பாதிக்கப்பட்டதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேலைக்காக பதிவு செய்யும் நபர்கள், சுற்றுலா வீசாவில் அனுப்பப்பட்டு ஓமான் உள்ளிட்ட நாடுகளில் விற்கப்படுவதாக, முறைப்பாடளித்ததன் பின்னர் துஷ்யந்த குறிப்பிட்டார்.
தங்களுக்குத் தெரிந்த ஒருவரும் இந்த மோசடியில் சிக்கியதாகவும் அதிர்ஷ்டவசமாக, அவரை மீட்பதற்கு தங்களுக்கு உதவி கிடைத்ததாகவும் குறிப்பிட்டார்.
பிரபல பாடகர் துஷ்மந்த் வீரமனின் மனைவியும் பிரபல மொடலும் அறிவிப்பாளருமான ஸ்டெபானி சிறிவர்தன, துஷ்யந்த் ஆகியோர் ஓமானில் பாதிக்கப்பட்ட பெண்ணை சீ.ஐ.டிக்கு அழைத்து வந்திருந்தனர்.