கொழும்பு - காலி முகத்திடல் மைதானத்தில் உள்ள கொடி கம்பத்திற்கு அருகிலிருந்து ஆண் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் கிராண்ட்பாஸைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர் சில காலமாக நீரிழிவு நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவரென விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குறித்த நபர் கடந்த 27ஆம் திகதி வீடு திரும்பியிருந்த நிலையில் நேற்று (28) காலை வீட்டிலிருந்து வெளியேறியிருந்ததாக காவல்துறையினரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் உறவினர்களால் உடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கோட்டை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.