சூரியவெவ - மஹாவெலிக்கட ஆரா குளத்தில் படகொன்று கவிழ்ந்ததில் காணாமல் போயிருந்த இரண்டு சிறுமிகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இன்று (13) காலை காவல்துறையினர் மற்றும் கடற்படையின் சுழியோடிகள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில், இந்த இரண்டு சிறுமிகளின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 மற்றும் 18 வயதுடைய இரண்டு சகோதரிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
எட்டு பேர் பயணம் செய்த படகு நேற்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அவர்களின் ஐந்து பேரை பிரதேசிவாசிகளில் காப்பாற்றியிருந்த போதிலும் மூன்று சிறுமிகள் காணாமல்போயிருந்தனர்.
இந்த காணாமல்போன 10 வயதுடைய சிறுமியொருவர் மாத்திரம் நேற்றைய தினம் கடற்படையினரால் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
எனினும், ஏனைய இருவரை தேடி தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
நேற்று(12) பிற்பகல் குருநாகலிலிருந்து சூரியவெவ பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்ற குழுவொன்று, மீன்பிடி படகு ஒன்றில் மஹாவெலிகட ஆர குளத்தை பார்வையிட சென்றிருந்தனர் அதன்போது, குறித்த படகு கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.