வெளிநாடு ஒன்றில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட சுமார் ஐந்து கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் கையிருப்பை கொழும்பில் உள்ள மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் சுங்க திணைக்களம் கண்டுபிடித்துள்ளது.
இதன்படி, இரண்டு கிலோகிராமிற்கும் அதிகமான எடையுள்ள அட்டைப் பெட்டியில் இருந்து 4,956 மெத்தம்பெட்டமைன் மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுங்கப் பணிப்பாளர் சுதத்த சில்வா தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியில் இருந்து அங்கொட பிரதேசத்தில் வசிக்கும் ஒருவருக்கு இந்த போதைப்பொருள் கையிருப்பு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அதில் தனிப்பட்ட பொருட்கள் இருப்பதாகவும் அதன் பெறுமதி ரூ. 495 இலட்சம் இற்கும் அதிகம் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)