"உண்மை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தை" மீண்டும் அமைப்பதற்கு தேவையான ஆதரவை வழங்குவதாக தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரம்போசா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார்.
உண்மை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்குத் தேவையான அறிவைப் பெற்றுக் கொள்வதற்காக இலங்கையில் இருந்து பிரதிநிதிகள் குழுவொன்று தென்னாபிரிக்காவிற்கு அனுப்பப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில், ஜனாதிபதி ரம்போசாவிடம் அறிவித்துள்ளார். உண்மை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கு தேவையான ஆதரவை வழங்க தயாராக இருப்பதாக ஜனாதிபதி சிறில் ரம்போசா தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் போது சமூகங்களுக்கிடையில் நீடித்த நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக உண்மை மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஒன்றை நிறுவுவதற்கான பிரேரணை அப்போதைய பிரதமரும் தற்போதைய ஜனாதிபதியுமான திரு.ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்டது. தென்னாபிரிக்கா கறுப்பு வெள்ளைப் பிரிவினையை முடிவுக்குக் கொண்டு வந்ததைப் போன்று இந்நாட்டில் உள்ள சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்குத் தேவையான முன்மொழிவுகளை முன்வைப்பதே இந்த அலுவலகத்தின் நோக்கமாகும்.
உண்மை மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஒன்றை நிறுவுவது தொடர்பான கலந்துரையாடல் கடந்த வியாழக்கிழமை கட்டுநாயக்க விமானப்படை வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்க ஜனாதிபதி திரு. சிரில் ராமபோசா ஜி. 20 மாநாடு முடிந்து தனது நாட்டுக்கு திரும்பும் போது சிறிது ஓய்வு எடுக்க இலங்கை வந்தார். (யாழ் நியூஸ்)