முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக பதவியில் அமர்த்துவது மற்றும் அவருக்கு கௌரவமான பிரியாவிடை வழங்குவது தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் குழு கலந்துரையாடல் ஒன்றை நடத்தியது.
இதன்படி, மிகக் குறுகிய காலத்திற்கு திரு. மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
எனினும், இந்த பேச்சுவார்த்தை இறுதி உடன்பாடு எட்டப்படாமல் முடிவுக்கு வந்தது.
இதேவேளை, செயற்பாட்டு அரசியலில் இருந்து விரைவில் ஓய்வு பெறுவதற்கு திரு. மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பல கட்சிகள் பல தலைமைகளின் கீழ் செயற்படவுள்ளதாகவும் பெரும்பாலான கட்சிகள் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் அரசியலில் முன்னேறுவதற்கு ஏற்கனவே கலந்துரையாடியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. (யாழ் நியூஸ்)