கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான காரியாலயம், மற்றும் பிரதேச அலுவலகங்கள் அனைத்திலும் கடவு சீட்டு விநியோகிக்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
குடிவரவு குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணனி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாகவே கடவுசீட்டு விநியோக நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.