600க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு விதிக்கப்பட்ட செஸ் வரி வீதத்தில் நேற்று (15) முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
1979 ஆம் ஆண்டு 40 ஆம் இலக்க ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14 ஆவது பிரிவின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, செஸ் வரி திருத்தம் காரணமாக அத்தியாவசிய பொருட்களுக்கான விலை அதிகரிப்பு ஏற்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அத்தியாவசியப் பொருட்கள் என பட்டியலிடப்பட்டுள்ள 120 பொருட்களில் எந்தப்பொருட்களின் விலையும் அதிகரிக்காது என அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, சுங்கம் அல்லாத வரிகள் படிப்படியாக நீக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2023 ஆம் நிதி ஆண்டுக்கான பாதீட்டு உரையில் தெரிவித்திருந்தார்.
அத்துடன், செஸ் வரி 3 ஆண்டுகளிலும் துறைமுகம் மற்றும் விமான நிலைய மேம்பாட்டு வரி 5 ஆண்டுகளிலும் படிப்படியாக நீக்கப்படும் என்றும் ஜனாதிபதி பாதீட்டு உரையில் மேலும் தெரிவித்திருந்தார்.