சமபோஷ என்ற வர்த்தக நாமத்தில் மேலதிக தானிய உணவுகளை விநியோகம் செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதித்து மொரவக்க நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்த வகை உணவுகளில் அஃப்லாடாக்சின் இருப்பதே இதற்குக் காரணம்.
இதன்படி, மொறவக்க பிரதேசத்திற்குட்பட்ட இப்பொருளின் விற்பனையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடை செய்யுமாறும், தற்போது சந்தையில் உள்ள பொருட்களின் இருப்புக்களை உடனடியாக அகற்றுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் இந்தப் பொருட்களைக் கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பியதில் அஃப்லாடோக்சின் அளவு அதிகமாக இருந்ததை வெளிப்படுத்தியதாக நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்கப்பட்டிருந்தது. (யாழ் நியூஸ்)