நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த வெளிநாடுகளுக்கான பயணத்தடையை தற்காலிகமாக நீக்குவதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே உத்தரவிட்டுள்ளார்.
எதிர்வரும் டிசெம்பர் மாதம் 23 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இந்தியாவில் இடம்பெறவுள்ள மதவழிபாட்டு நிகழ்வில் பங்கேற்பதற்காக அவருக்கான பயணத்தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பினை குடிவரவு குடியல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறு மேல்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நிதி மோசடி வழக்கொன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவிற்கு வெளிநாடுகளுக்கு செல்ல பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.