மினுவாங்கொடையில் இடம்பெற்ற விசேட அதிரடி நடவடிக்கையின் போது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் கும்பலைச் சேர்ந்த இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
மினுவாங்கொடை பொல்வத்த பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் கும்பல் உரகஹ இந்திக்கவின் கூட்டாளிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இரண்டு சந்தேக நபர்களும் பல கொலைகள் உட்பட பல குற்றங்கள் தொடர்பாக தேடப்பட்டு வந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், துப்பாக்கிச் சூட்டில் STF பணியாளர் ஒருவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. (யாழ் நியூஸ்)