நாளை (23) முதல் 4 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, 1 கி லோகிராம் வெள்ளை சீனியின் விலை ரூ. 9 இனாலும், 1 கிலோகிராம் கோதுமை மாவின் விலை ரூ. 14 இனாலும், 1 கிலோகிராம் பூண்டு ரூ. 30 இனாலும், 1 கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை ரூ. 43 இனாலும் குறைக்கப்படவுள்ளது.
இந்த விலை குறைப்புடன் வெள்ளை சீனி ஒரு கிலோகிராமின் விலை ரூ. 229 ஆகவும், கோதுமை மா ஒரு கிலோ கிராமின் விலை ரூ. 265 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ வெள்ளைப்பூண்டு ரூ. 495 இற்கும், ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ. 255 இற்கும் கொள்வனவு செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)