கல்வி அமைச்சு இன்று (21) தமது முதல் கணிதக் கல்வி ஆசிரியர் விழிப்புணர்வு தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
MetaHub (Mathematics Education Teacher Awareness) என்ற இந்த தளத்தின் ஊடாக கணிதப் பாடத்துடன் தொடர்புடைய ஆசிரியர்கள், பாடம் தொடர்பாக தாம் எதிர்கொள்ளும் சிக்கல்களை விரைவாகவும் எளிதாகவும் தீர்த்துக்கொள்ளமுடியும்.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அண்மையில் கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என். ரணசிங்கவினால் கல்வி அமைச்சில் கைச்சாத்திடப்பட்டது.
இந்த இணைய தளத்தின் இணை நிறுவுனர்களாக இலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆலோசகர் கலாநிதி ஷெல்டன் பெரேரா மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் கலாநிதி காயா ஜெயக்கொடி ஆகியோர் உள்ளனர்.
கணித பாடத்தை கற்பித்தல் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க https://meta-hub.org.lk/ என்ற இணைய தளத்திற்கு சென்று பதிவு செய்யுமாறு ஆசிரியர்களை கல்வி அமைச்சு அறிவுறுத்துகிறது.