பல்வேறு பணிகள் மற்றும் நிகழ்வுகளுக்கான செலவினங்களை இடைநிறுத்துமாறு அரசாங்க நிறுவனங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை மீண்டும் வலியுறுத்தி நிதி அமைச்சின் செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திறைசேரியின் செயலாளர் கே.எம்.மகிந்த சிறிவர்தன வெள்ளிக்கிழமை (25) விடுத்துள்ள சுற்றறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நிகழ்வுகளுக்கான செலவினங்களை இடைநிறுத்துமாறு முன்னர் அறிவுறுத்தப்பட்டிருந்த போதிலும், பல நிறுவனங்கள் நிகழ்வுகள் மற்றும் பணிகளுக்காக செலவுகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அனைத்து அமைச்சுக்கள், திணைக்களம், அரச கூட்டுத்தாபனங்கள், நிறுவனங்கள், அரச நிறுவனங்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைப்புகள் மற்றும் அரச வங்கிகள் திறப்பு விழாக்கள், கடமைகளை மேற்கொள்ளும் உத்தியோகத்தர்களுக்காக நடத்தப்படும் நிகழ்வுகள் / ஓய்வுபெறுதல், ஒன்றுகூடல்கள் மற்றும் விருந்துகள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கான செலவுகளை இடைநிறுத்துமாறு சுற்றறிக்கை அறிவுறுத்துகிறது. (யாழ் நியூஸ்)