முதல் போட்டி
இந்த நிலையில், ஃபிஃபா உலககோப்பையின் தொடக்க நிகழ்ச்சி தோஹாவிலிருந்து 40 கி.மீ. அருகே உள்ள அல் பாயத் மைதானத்தில் நடைபெறுகிறது. இங்கு 60 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை பார்க்கலாம். முதல் லீக் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் கத்தாரும், ஈகுவடார் அணியும் மோத உள்ளன. இந்தப் போட்டி இன்று இரவு 9.30 மணிக்கு தொடங்குகிறது.
தொடக்க விழா
முதல் போட்டிக்கு முன்பு கோலாகலமாக தொடக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் உலக புகழ் பெற்ற BTS இசைக்குழு தங்களது இசையை நிகழ்ச்சியை நடத்துகின்றன. இதனால், ரசிகர்களிடையே, தொடக்க நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த குழு தங்களது புகழ் பெற்ற Dreamers பாடலை, நிகழ்ச்சியில் பாட உள்ளனர். மேலும் கத்தார் நாட்டு கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் தொடக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது.
எந்த சேனல்?
இந்த தொடக்க விழா இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதனை இந்திய சேனல் ஆன ஸ்போர்ட்ஸ் 18 என்ற சேனல் ஒளிபரப்பு செய்ய உள்ளது. மேலும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் இம்முறை உலகக்கோப்பை போட்டிகளை ஒலிபரப்பவுள்ளது. கால்பந்து போட்டியை பொறுத்தவரை இந்த அணி தான் வெல்லும் என்று நாம் கணிக்க முடியாது. அது தான் கால்பந்து போட்டியின் சுவாரஸ்யமே. ஆனால் இம்முறை களமிறங்கிய அணிகளில் பிரேசில் பலமாக காணப்படுகிறது.
கடைசி வாய்ப்பு
இதனால் 20 ஆண்டுகளுக்கு பிறகு பிரேசில் அணி ஃபிஃபா உலககோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆர்ஜென்டினாவின் மெஸ்ஸி, போர்ச்சுக்கல்லின் கிறிஸ்டியானோ ரொனால்டோ தங்களது கடைசி உலககோப்பையில் விளையாடுகிறார்கள்.இதனால் இம்முறையாவது கோப்பையை அவர்கள் வெல்வார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.