இலங்கையில் வைரஸ் தொற்று அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நோய்க்கு இன்புளுவன்சா போன்ற அறிகுறிகள் காணப்படுவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இந்த வைரஸ் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் கொண்டுள்ளது என்று கூறிய அவர், இது ஒரு தொற்று நோய் என்றும், நபருக்கு நபர் வேகமாகப் பரவும் என்றும் எச்சரித்தார்.
எவ்வாறாயினும், இது கோவிட்-19 வைரஸைப் போன்று ஆபத்தானது அல்ல என டாக்டர் ஹேமந்த ஹேரத் தெளிவுபடுத்தினார்.
காய்ச்சல் வைரஸின் அறிகுறிகள் கடுமையாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு அவர் பொதுமக்களை வலியுறுத்தினார். (யாழ் நியூஸ்)