உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சிப் போக்கில் பதிவாகியுள்ளது.
இதன்படி, ப்ரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்றைய தினம் 2.16 டொலர் வீழ்ச்சியடைந்து, 87.62 டொலராக பதிவாகியுள்ளது.
அத்துடன், மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை, 1.56 டொலர் வீழ்ச்சியடைந்து, 80.08 டொலராக பதிவாகியுள்ளது.
இயற்கை எரிவாயு பீப்பாய் ஒன்றின் விலை 0.066 டொலர் வீழ்ச்சியடைந்து 6.303 டொலராக காணப்படுகிறது.