இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக ஜனாதிபதி சட்டத்தரணி ஃபாயிஸ் முஸ்தபா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மூத்த சட்டத்தரணி, முஸ்தபாவை ஐந்து வருட காலத்திற்கு அந்த பதவிக்கு நியமித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஃபாயிஸ் முஸ்தபா, முன்னணி ஜனாதிபதி சட்டத்தரணியாவார். அத்துடன் அவர், ஐக்கிய இராச்சியத்திற்கான முன்னாள் இலங்கை உயர்ஸ்தானிகராகவும் பணியாற்றினார்.