ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டித் தொடருக்கான இலங்கை அணி விபரம் வெளியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டித் தொடருக்கான இலங்கை அணி விபரம் வெளியானது!

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரில் விளையாடுவதற்கு பின்வரும் 16 பேர் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தெரிவு செய்துள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் நாளை நவம்பர் 25, 2022 அன்று ஆரம்பமாகவுள்ளது. 

பல்லேகலை சர்வதேச கிரிக்கட் மைதானம், கண்டி.

அணி

1. தசுன் ஷானக – அணித்தலைவர்
2. பெத்தும் நிஸ்ஸங்க
3. தனஞ்சய டி சில்வா
4. சரித் அசலங்க
5. தினேஷ் சந்திமால்
6. குசல் மெண்டிஸ்
7. வனிந்து ஹசரங்க
8. துனித் வெல்லாலகே
9. தனஞ்சய லக்‌ஷான்
10. கசுன் ராஜித
11. மகேஷ் தீக்‌ஷன
12. பிரமோத் மதுஷான்
13. அசித்த பெர்னாண்டோ
14. அஷேன் பண்டார
15. லஹிரு குமார
16. பானுக ராஜபக்ச

பானுக ராஜபக்ச

இதற்கிடையில், ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எடுக்க விரும்புவதால், தற்போதைய அணியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு இலங்கை கிரிக்கெட்டிடம் பானுக ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

அதன்படி, ராஜபக்சே அணியில் இருந்து விடுவிக்கப்படுவார். எவ்வாறாயினும் அபுதாபி T10 போட்டிகளில் பங்குகொள்ளவும் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை


நிலுவையிலுள்ள ஒப்புதல்

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க அணிக்கு இன்னும் அனுமதி வழங்கவில்லை என இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.