புதிதாக விரிவுபடுத்தப்பட்ட ஹமாத் சர்வதேச விமான நிலையத்தை பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் காலித் பின் கலீஃபா பின் அப்துல் அஜிஸ் அல் தானி இன்று (10) திறந்து வைத்தார்.
அங்கு அவர் புதிய பயணிகள் முனையங்களைச் பார்வையிட்டார். மேலும் பயணிகளை உள்வாங்கும் மற்றும் புறப்படுதல் பயன்படுத்தப்படும் நவீன அமைப்புகள் ஆகியவற்றின் மேலோட்டத்தை பார்வையிட்டார்
FIFA உலகக் கோப்பை கத்தார் 2022 இன் பயணிகள், கத்தாரின் விருந்தினர்கள் மற்றும் ரசிகர்களைப் பெறுவதற்காக பல்வேறு வசதிகள் மற்றும் உபகரணங்கள் மற்றும் அனைத்து செயல்பாட்டு செயல்முறைகளிலும் அதனுடன் இணைந்த மேம்பாடு குறித்தும் அவருக்கு விளக்கப்பட்டது.
பிரதம மந்திரி மற்றும் உள்துறை அமைச்சர் அவர்களுடன் மாண்புமிகு அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். (யாழ் நியூஸ்)