2023ஆம் ஆண்டு முதல் முதலாம் தரத்திலிருந்து மாணவர்கள் மத்தியில் ஆங்கில மொழி பேசும் பழக்கத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, அரச பாடசாலைகளின் முதலாம் மற்றும் இரண்டாம் தரங்களுக்கான சுமார் 13,500 ஆசிரியர்கள் பயிற்றுவிப்பாளர்களாகப் பயிற்சியளிக்கப்பட உள்ளனர்.
எதிர்வரும் 18 ஆம் மற்றும் 19ஆம் திகதிகளில் இந்த நடவடிக்கையை முன்னெடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கில மொழிமூலப் பாடப்புத்தகங்களில் உள்ள இலக்கணப் பிழைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டதுடன், அவ்வாறான இலக்கணப் பிழைகள் உள்ளதா என்பதைக் கண்டறியுமாறு தேசிய கல்வி நிறுவகத்துக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.