மின் கட்டண அதிகரிப்பு தவிர்க்க முடியாதது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
யார் ஆட்சிக்கு வந்தாலும் மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்காமல் செயற்பட முடியாது என வெள்ளிக்கிழமை (25) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் தெரிவித்தார்.
யார் ஜனாதிபதியாக இருந்தாலும், அமைச்சராக இருந்தாலும், யார் ஆட்சியை நடத்தினாலும், மீண்டும் மின் கட்டண உயர்வை தவிர்க்க முடியாது.
2022 இல் பெய்த மழையை 2023 இல் இலங்கை பெறும் என்று எதிர்பார்க்கப்படவில்லை என்று அவர் மேலும் கூறினார்.
24 மணி நேரமும் மின்சாரம் வழங்க ஒரு அலகிற்கு ரூ. 56.90 தேவை, இருப்பினும் நாங்கள் இன்னும் ஒரு அலகிற்கு ரூ. 29 அறவிடுகின்றோம். இது நஷ்டம். எங்களுக்கு எரிபொருள், நிலக்கரி மற்றும் உலை எண்ணெய் தேவை, அவற்றை யாரும் இலவசமாக வழங்குவதில்லை" என்று அவர் மேலும் கூறினார்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மின் கட்டணம் 75 சதவீதம் உயர்த்தப்பட்டது. (யாழ் நியூஸ்)