வாகனங்களின் பதிவுக்கான திருத்தப்பட்ட கட்டணம் நாளை (18) வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவினால் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் அறவிடப்படும் கட்டணங்கள் அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி நவம்பர் 14ஆம் திகதி வெளியிடப்பட்டது.
இதன் மூலம், மோட்டார் வாகனத்தின் தற்காலிக உரிமையாளராக ஒரு நபரை பதிவு செய்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணம் பின்வருமாறு வசூலிக்கப்படும்,
சாதாரண அடிப்படையில் 1,000 ரூபாய்;
முன்னுரிமை அடிப்படையில் 2,000 ரூபாய்;
ஒரு நாள் அடிப்படையில் 3,000 ரூபாய்.
பதிவை ரத்து செய்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணம் பின்வருமாறு,
சாதாரண அடிப்படையில் 1,000 ரூபாய்;
முன்னுரிமை அடிப்படையில் 2,000 ரூபாய்;
ஒரு நாள் அடிப்படையில் 3,000 ரூபாய்
ஒரு மோட்டார் வாகனத்தின் பதிவை இடைநிறுத்துவதற்கு செலுத்த வேண்டிய கட்டணம் பின்வருமாறு,
சாதாரண அடிப்படையில் 1,000 ரூபாய்;
முன்னுரிமை அடிப்படையில் 1,500 ரூபாய்;
ஒரு நாள் அடிப்படையில் 2,000 ரூபாய் (யாழ் நியூஸ்)