மட்டக்குளிய பிரதேசத்தில் 38 வயதுடைய நபர் ஒருவர் இன்று வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாகனத்தில் வந்த இருவரினால் குறித்த நபர் தாக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் பாதிக்கப்பட்டவர் பிணையில் வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)