நாளை (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க அரசிற்கு சொந்தமான லங்கா சதொச தீர்மானித்துள்ளது.
உள்ளூர் பல்பொருள் அங்காடி சங்கிலி நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளது.
இதன்படி, திருத்தப்பட்ட விலைகள் பின்வருமாறு;
சிவப்பு பச்சை அரிசி ரூ. 6 குறைக்கப்பட்டது. புதிய விலை - ரூ. 199
கீரி சம்பா ரூ. 15 குறைக்கப்பட்டது. புதிய விலை - ரூ. 225
பெரிய வெங்காயம் ரூ. 30 குறைக்கப்பட்டது. புதிய விலை - ரூ. 225
நெத்திலி ரூ. 150 குறைக்கப்பட்டது. புதிய விலை - ரூ. 1150 (யாழ் நியூஸ்)