இலங்கை கிரிக்கெட் வீரரான தனுஷ்க குணதிலக்க அவுஸ்திரேலியாவின் சிட்னியில் வைத்து நேற்று சனிக்கிழமை (5) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பெண்ணொருவர் செய்த முறைப்பாட்டையடுத்தே தனுஷ்க குணதிலக்க கைதுசெய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் தனுஷ்க குணதிலக்க பாலியல் பலாத்கார குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற இலங்கை அணி நேற்றையதினம் இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்ற போட்டியில் தோல்வியடைந்த நிலையில் அவுஸ்திரேலியாவில் இருந்து இன்று காலை நாடு திரும்புகின்றது.
இந்நிலையில் தனுஷ்க குணதிலக்க அணியில் இல்லாத நிலையிலேயே இலங்கை அணி நாடு திரும்புகின்றது.
இருப்பினும் தனுஷ்க குணதிலக்க கடந்த மூன்று வாரங்களுக்கு முன் உபாதைக்குள்ளான நிலையில், அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அஷேன் பண்டார இணைத்துக்கொள்ளப்பட்டார். ஆனால் அணி நிர்வாகம் அவரை அவுஸ்திரேலியாவில் இருந்து நாட்டுக்கு திருப்பி அனுப்பாது அணியுடன் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.