டீசல் விலை அதிகரிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, டீசல் விலை அதிகரிப்புடன் ஒப்பிடுகையில், பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படுமென எதிர்பார்க்கப்படவில்லை.
கடந்த முறை டீசல் விலை ரூ. 15 இனால் குறைக்கப்பட்ட போது, அந்த பெறுமதியுடன் ஒப்பிடுகையில் பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது எனவும் கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
டீசலுக்கான ரூ. 15 தொகை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், எனவே பஸ் கட்டணங்களை திருத்த வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நேற்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஆட்டோ டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளை உயர்த்த இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. (யாழ் நியூஸ்)