இலங்கை-பாகிஸ்தான் தொடரின் போது ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் முன்வைத்த குற்றச்சாட்டை விசாரணை செய்யுமாறு சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அறிவிக்க இலங்கை கிரிக்கட் நிர்வாக குழு தீர்மானித்துள்ளது.
இதன்படி, குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊழல் தடுப்புப் பிரிவின் பொது முகாமையாளர் அலெக்ஸ் மார்ஷலுக்கு அறிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கடந்த ஜூலை மாதம் காலி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 400 ஓட்டங்களுக்கு மேல் பெற்ற போதிலும், அந்த போட்டியில் தோல்வியடைய காரணம் போட்டி நிர்ணயமே என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார அண்மையில் குற்றஞ்சாட்டினார். (யாழ் நியூஸ்)