கடந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் ஆட்சியின் போது பாடசாலை மாணவர்களிடையே நடைமுறையில் இருந்த இஸ்லாம் பாடப் புத்தகம் சில தவறான கருத்துக்களை போதிப்பதாக, அன்றைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க மாணவர்களிடமிருந்து திரும்பப் பெறப்பட்டது.
இஸ்லாமிய பாடப் புத்தகங்கள் திருத்தி எழுதப்பட்டு மாணவர்களுக்கு மீண்டும் வினியோகிக்கப்படும் என்ன அன்றைய அரசினால் கூறப்பட்டிருந்தாலும், அது சம்பந்தமாக எந்தவிதமான முன்னேற்றகரமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இதைத் தொடர்ந்து சில பெற்றார் மற்றும் சில முஸ்லீம் அமைப்புகளும் மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்ததும் குறிப்பிடத்தக்கது.
இன்று, நீதிக்கான மையம் என்ற அமைப்பு, மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன், மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் செயலாளர் அர்க்கம் னூரமித் உப்பட ஒரு குழுவினர் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களை சந்தித்து இது விடயமாக கலந்துரையாடினர்.
இதன்போது முஸ்லிம் மாணவர்களுக்கான இஸ்லாம் பாட புத்தகத்தை மீண்டும் வழங்குமாறும், அவற்றில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமாயின் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டலின் அடிப்படையில் அவர்களுடன் இணைந்து திருத்தங்களை மேற்கொள்ளுமாறும் கல்வி அமைச்சர் உத்தரவிட்டார்.
-பேருவளை ஹில்மி