2021 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 9 ஏ சித்தி பெற்ற மாணவன் ஒருவருக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கண்டி பொலிஸாரால் செவ்வாய்க்கிழமை (29 ஆம் திகதி) கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைக்கு அடிமையான ஒருவரால் தீ வைக்கப்பட்ட நிலையில், மாணவன் பலத்த தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் அம்பிட்டிய மீகனுவ பிரதேசத்தில் வசிக்கும் 17 வயதுடைய சிறுவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணைகளின்படி, மாணவர் சனிக்கிழமை (26) இரவு தனது குடும்ப உறுப்பினர்களுடன் வீடு திரும்பியபோது அந்நியர் ஒருவரால் எதிர்ப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
கையில் தீபத்தையும், மண்ணெண்ணெய் போத்தலையும் ஏந்திய குறித்த சந்தேக நபர், சிறுவனை குறித்த இடத்தில் எதிர்கொண்டு, மண்ணெண்ணெய் மற்றும் தீபத்தை வீசி எறிந்துள்ளார்.
17 வயதுடையவரின் கைகள் மற்றும் கழுத்தில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
கண்டி பொலிஸாரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும் குற்றப் பின்னணி கொண்டவர் எனவும் தெரியவந்துள்ளது. (யாழ் நியூஸ்)