கதிர்காமம் பகுதியில் 05 வயதுடைய குழந்தை ஒன்று தற்செயலாக வெளியேறிய ஏர் ரைபிள் துப்பாக்கியால் ஏற்பட்ட காயங்களினால் உயிரிழந்துள்ளது.
கதிர்காமம், தெட்டகமுவ பிரதேசத்தில் பதிவாகிய இந்த சம்பவத்தில் குழந்தையின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
படுகாயமடைந்த குழந்தை கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
18 வயதுடைய சிறுவன் ஒருவனின் வசம் இருந்த ஏர் ரைபிள் தவறுதலாக இயக்கப்பட்டதால் இந்த துயர சம்பவம் நேரிட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக குறித்த வாலிபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். (யாழ் நியூஸ்)