இலங்கையில் உள்ள 21 MOH பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
அதிக ஆபத்துள்ள 21 MOH பிரிவுகளில் 09 பிரிவுகளில் டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
பிலியந்தலை, ஹரிஸ்பத்துவ, உக்குவெல, பதுளை, கேகாலை மற்றும் மாவனெல்ல ஆகிய பிரதேசங்கள் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள அதியுயர் வலயங்களில் அடங்கும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் 43 ஆவது வாரத்தில் அதிகூடிய டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ள நிலையில் மொத்தமாக 143 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியில் 7,296 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்த நிலையில், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 14,937 ஆக அதிகரித்துள்ளது.
இதன் அடிப்படையில், 7,641 டெங்கு நோயாளர்கள் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 62,435 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 40,248 நோயாளர்கள் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)