2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக எதிர்வரும் 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளை தேசிய போராட்ட நாட்களாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு அறிவித்துள்ளது.
அத்துடன், தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம் எதிர்ப்பு தினத்தை அறிவித்துள்ளதுடன், அதன்படி எதிர்வரும் 8ஆம் திகதி வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக போராட்டங்களை ஏற்பாடு செய்யவுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அதன்படி, அன்றைய தினங்களில் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க வற்புறுத்தவுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. (யாழ் நியூஸ்)