யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஊசி மூலம் போதைப்பொருளை எடுத்துக்கொண்ட 15 வயதுடைய சிறுவன் கிருமி தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவனுக்கு காய்ச்சல் என யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சிறுவன் ஊசி மூலம் போதைப்பொருட்களை நுகர்வதாக தெரியவந்துள்ளது.
அவ்வாறு ஊசி மூலம் போதைப்பொருளை ஏற்றிய போதே கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளை ஊசி மூலம் நுகர்ந்ததால் கிருமி தொற்று ஏற்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.