14 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் தனது இல்லத்தில் பயன்படுத்தப்பட்ட மடிக்கணினியின் சார்ஜர் வெடித்ததில் ஏற்பட்ட காயங்களினால் உயிரிழந்துள்ளார்.
அம்பலாங்கொட, படபொல, கொபேதுடுவ பிரதேசத்தில் நேற்று (16) இந்த சம்பவம்இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் இந்திகெட்டிய பென்வல வீதியில் வசிக்கும் 14 வயதுடைய சிறுவன் என பொலிஸார் தெரிவித்தனர்.
குழந்தை தனது இடுப்பு எலும்பில் பேலன்ஸ் செய்யும் போது சார்ஜருடன் இணைக்கப்பட்டிருந்த மடிக்கணினியை பயன்படுத்தியதாகவும், இதன் போது சார்ஜர் வெடித்து சிதறியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குழந்தை பொல்வத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் பலப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் குழந்தை உயிரிழந்துள்ளது. (யாழ் நியூஸ்)