நோர்வேயில் வசிக்கும் இலங்கையர் ஒருவருக்கு ரூ. 120 மில்லியன் ஏமாற்றிய இரண்டு பெண்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் 30 மற்றும் 34 வயதுடைய யாழ்ப்பாணத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நோர்வேயில் வசிக்கும் இலங்கையர் ஒருவரிடம் இருந்து ரூ. 100 கோடி மற்றும் தங்கப் பொருட்களை உயிரிழந்த தனது தந்தையின் பெயரில் தனியார் வங்கியில் வைப்பிலிட்டுள்ளதாகவும் அவற்றை சட்ட ரீதியாக விடுவிக்க விரும்புவதாகவும் கூறி பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும் டிசம்பர் 1ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)