2015-2019ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் மத்திய கலாசார நிதியில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டது தொடர்பாக கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் விசேட விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவில் (கோப் குழு) தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, 2017ஆம் ஆண்டு தொல்பொருள் திணைக்களத்திற்கு 2250 காவலர்கள் நியமிக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும் குழு கவனம் செலுத்தியுள்ளது.
ஆளும் குழுவின் அனுமதியின்றி நிலையான வைப்புத் தொகையிலிருந்து நூறு கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் விடுவிப்பது தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கோப் குழு தெரிவித்துள்ளது.
பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழு 24 அன்று பாராளுமன்ற வளாகத்தில் அதன் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தலைமையில் கூடியது.
அந்த சந்திப்பில் இந்த உண்மைகள் வெளியாகின.
2018-2019 க்கு இடையில் மத்திய கலாசார நிதி 100 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், வருவாய் ஈட்டும் திட்டங்களை விட அரசியல் திட்டங்களுக்காக அதிக பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும் அங்கு தகவல் வெளியாகியுள்ளது.
ஊழியர்களின் சம்பளத்திற்காக 12 கோடி ரூபாவிற்கும் மேல் செலவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
21 தகன விழாக்களுக்கு பல கோடி ரூபாயும், 368 திட்டங்களுக்கு தலா 30 லட்சம் ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது தெரியவந்தது. (யாழ் நியூஸ்)