VIDEO: இஸ்லாம் பாட நூல் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: இஸ்லாம் பாட நூல் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

கல்வி வெளி­யீட்டு ஆணை­யாளர் நாய­கத்தின் பணிப்­பு­ரையின் பேரில் இஸ்லாம் பாட நூல் விநி­யோகம் நிறுத்­தப்­பட்­டமை மற்றும் மாண­வர்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட பாட­நூல்கள் மீளப் பெறப்­பட்­ட­மையால் முஸ்லிம் பாட­சாலை மாண­வர்­களின் மனித உரிமை மீறப்­பட்­டுள்­ள­தாக மனித உரிமை ஆணைக்­கு­ழுவில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

இதனால், 11 மாதங்­க­ளாக மாண­வர்­களின் இஸ்லாம் பாட கல்வி போதித்தல் மற்றும் கற்றல் நட­வ­டிக்கை முற்­றாக பாதிக்­கப்­பட்­டுள்­ளதால் மாண­வர்­களின் கல்வி உரிமை திட்­ட­மி­டப்­பட்டு மறுக்­கப்­பட்­டுள்­ள­தாக குறித்த முறைப்­பாட்டில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

நீதிக்­கான மையத்தின் தலைவர் சட்­டத்­த­ரணி ஷஃபி எச். இஸ்­மாயீல், சட்­டத்­த­ரணி ஜிப்­ரியா இர்ஷாத் ஊடாக இந்த முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

இது தொடர்பில் நீதிக்­கான மையத்தின் தலைவர் கருத்து தெரி­விக்­கையில்,

கடந்த வருடம் டிசம்பர் மாதம் இலங்­கையின் கல்வி வெளி­யீட்டு ஆணை­யாளர் நாய­கத்­தினால் தரம் 6,7,10 மற்றும் கல்விப் பொதுத் தரா­தர சாதா­ரண தர மாண­வர்­க­ளு­டைய இஸ்லாம் பாடநூல் விநி­யோ­கத்தை உடன் நிறுத்­து­மாறும், ஏற்­க­னவே விநி­யோ­கிக்­கப்­பட்ட பாட­ப் புத்­த­கங்­களை மீளப்­பெறுமாறும் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

அதற்­க­மை­வாக, அனைத்து பாட­சாலை அதி­பர்­க­ளாலும் வழங்­கப்­பட்ட பாட புத்­த­கங்கள் மீளப்­பெ­றப்­பட்­ட­தோடு இஸ்லாம் பாடநூல் விநி­யோ­கமும் நிறுத்­தப்­பட்­டுள்­ளது.

மேலும் ஆணை­யாளர் பாடநூல் விநி­யோகம் தற்­கா­லி­க­மா­கவே நிறுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் பாடப் புத்­தகங்கள் மீளவும் துரி­த­மாக மாண­வர்­க­ளுக்கு வழங்­கப்­படும் என்றும் தெரி­வித்­தி­ருந்தார்.

இருப்­பினும் 9 மாதங்கள் கடந்­துள்ள நிலையில் பாடப் புத்­த­கங்கள் இன்­னமும் மாண­வர்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வில்லை. எதிர்­வரும் இரண்டு அல்­லது மூன்று மாதங்­களில் க.பொ.த சாதா­ரண தரப் பரீட்­சைகள் இடம்­பெற உள்­ளது.

கல்விப் பொதுத் தரா­தரப் சாதா­ரண தர மாண­வர்கள் பரீட்­சைக்­காக தரம் 10 மற்றும் 11 பாடப் ­புத்­த­கங்­களைக் கொண்டே பரீட்­சைக்குத் தயா­ராக வேண்டும். மேலும் தரம் 6 மற்றும் 7 மாண­வர்­களும் பாடப் புத்­தகம் இன்­மையால் பெரிதும் பாதிக்­கப்­பட்டிருக்­கி­றார்கள்.

2006 கல்வித் திட்­டத்­திற்கு அமை­வாக பாட­சா­லை­களில் சாதா­ரண தரம் கல்­வி­யிலும் மாண­வர்கள் தமது சமயம் சார்ந்த பாடத்தை தெரிவு செய்­வது என்­பது கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்ள நிலையில் தற்­போது சமயப் பாடத்தை கற்­ப­தற்கு பாடநூல் இல்லை.

இந்­நி­லையில், பாடநூல் சம்பந்­த­மாக முன்­வைத்த பணிப்­பு­ரையை வாபஸ் பெற்­றுக்­கொள்ள வேண்டும். மேலும் மாண­வர்­க­ளிடம் இருந்து மீள பெறப்­பட்ட புத்தகங்களை உடனடியாக அவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதோடு மாணவர்களுக்கான இஸ்லாம் பாடநூல் விநியோகத்தை உடன் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கல்வி வெளியீட்டு ஆணையாளருக்கு நாம் கோரிக்கை முன்வைக்கிறோம் என்றார். 

-நன்றி விடிவெள்ளி

ඉස්ලාම් ආගම් පොත් ගැන මා. හිමිකම් කොමිසමට පැමිණිල්ලක්. Daily Ceylon செய்திகளை WhatsApp இல் உடனடியாக பெற இணைந்து கொள்ளுங்கள் https://chat.whatsapp.com/IcqNBXjrRR23gEw9KkO8PG

Posted by Daily Ceylon on Wednesday, 5 October 2022

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.