VIDEO: ஜனாதிபதி ரணில் இன்று பாராளுமன்றத்தில் நிகழ்த்திய விசேட உரை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: ஜனாதிபதி ரணில் இன்று பாராளுமன்றத்தில் நிகழ்த்திய விசேட உரை!

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஜப்பான், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் பொதுவான உடன்படிக்கைக்கு வர எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடன் மறுசீரமைப்பிற்கு ஜப்பான் ஒப்புக்கொண்டுள்ளமை நல்ல அறிகுறி எனவும் நாடுகளுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கலந்துரையாடும் மாநாட்டிற்கு தலைமை தாங்க ஜப்பான் இணங்கியுள்ளதாகவும் இன்று (06) விடுத்துள்ள விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவுடனான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், உடன்பாடு எட்டப்பட்டதன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த வருட இறுதிக்குள் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வந்து ரூபாயை பலப்படுத்த தாம் நம்புவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தற்போது கணிக்கப்பட்டுள்ளதைப் போன்று இவ்வருடம் பொருளாதாரம் 7% - 8% வரை சுருங்கக் கூடும் என குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு சில நடவடிக்கைகளை மேற்கொள்வார் என நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

இதன்படி, அடிப்படை நுகர்வுப் பொருட்களுக்கான அதிகபட்ச விலை வரம்பு, உள்ளூர் உற்பத்தி தடைகளை நீக்குதல், அந்நிய செலாவணி விதிமுறைகளை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு தளர்த்துதல் மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்துதல் ஆகியவை மேற்கொள்ளப்பட உள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)

🟠 රටේ ආර්ථික තත්ත්වය පිළිබඳව ජනාධිපතිවරයා විසින් සිදුකරනු ලැබූ විශේෂ ප්‍රකාශය

Posted by Citizen.lk on Wednesday, 5 October 2022

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.