ராஜபக்சர்களால் இந்த நாடு அழிக்கப்பட்டது என மிஹிந்தல ரஜமஹா விகாரையின் கலாநிதி வலஹங்குனவேவே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.
விழுந்தும் மீண்டும் அரசியலுக்கு வருவது, அதன் ருசி தெரிந்ததால் தான் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
அவர்களுக்கு மீண்டும் வாக்களித்தால், அவர்களுக்கு வாக்களிப்பவர்கள் மாடுகள் என்று அவர் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ருவான்மாலி விகாரையில் இடம்பெற்ற சத்தியப்பிரமாண நிகழ்வு ஒரு சாபக்கேடு என்றும் அந்த சாபம் நிறைவேறியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிக்குகள் அரசியலுக்கு வருவது குறித்து விமர்சித்த அவர், பிக்குகள் சமய நடவடிக்கைகளில் ஈடுபட்டாலே போதும் எனவும் தெரிவித்துள்ளார்.
இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)