அட்டாளைச்சேனை பிரதேசத்தின் கலை இலக்கிய விழா அட்டாளைச்சேனை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் (27) வியாழக்கிழமை நடைபெற்றது.
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் நஹீஜா முசாபிர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் எம்.சி அஹமது சாஹிர், அதிதியாக பாவேந்தல் பாலமுனை பாறூக், விசேட அதிதியாக மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரீ.எம்.ரின்சான் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
கலாசார உத்தியோகத்தர்களான எம்.எஸ். ராஜாயா, வி. பத்மராசா ஆகியோரின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், அலுவலக உத்தியோகத்தர்கள், கலைஞர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில், பிரதேச இலக்கிய விழாவில் வெற்றி பெற்ற மாணவர்கள், கலைஞர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
யாழ் நியூஸிற்காக எம்.எஸ்.எம்.ஸாகிர்