அத்துருகிரிய பிரதேசத்தின் அதிவேக நெடுஞ்சாலையில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 57 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காலியில் இருந்து அதுருகிரிய நோக்கி பயணித்த வேன் ஒன்றும் ஜீப் வண்டி ஒன்றும் 3.9 கிலோமீற்றர் தூணுக்கும் 4.1 கிலோமீற்றர் தூணுக்கும் இடையில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த ஜீப் வண்டியின் சாரதி மற்றும் மற்றுமொரு நபர் மற்றும் வேனில் பயணித்த ஐந்து பெண்களும் காயமடைந்து ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் வேனில் பயணித்த பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மாலபே பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அதுருகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)