மொரட்டுவை - கடுபெத்த பகுதியில் வங்கியில் வைப்பிலிடுவதற்கு கொண்டு செல்லப்பட்ட வர்த்தக நிலையம் ஒன்றின் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 04ஆம் திகதி இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றதோடு இதன்போது 21 இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு கொள்ளை சம்பவத்துக்காக பயன்படுத்தப்பட்ட வேன் மற்றும் ஆயுதங்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.