அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் (SOE) பணியாற்றும் ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆக மாற்றியமைக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இடைக்கால பாதீட்டின்போது கட்டாய ஓய்வு வயது 60 ஆக அறிவிக்கப்பட்டது.
அதற்கமைய, 2023.01.01 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் அதற்கான ஒழுங்குவிதிகளை விதித்து ஏற்புடைய சுற்றறிக்கை ஆலோசனைகளை வெளியிடுவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.