இலங்கையில் மருத்துவர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயதை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி, மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை ஒரு வருடத்தினால் நீடிக்கவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (18) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், இந்த ஆண்டு 63 வயதை நிறைவு செய்த மருத்துவர்கள் 2022 டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் ஓய்வு பெற வேண்டும். இந்த ஆண்டு இறுதிக்குள் 60, 61 மற்றும் 62 வயதுடைய மருத்துவர்கள் அடுத்த வருடம் தங்கள் பிறந்த தேதியைத் தொடர்ந்து ஓய்வு பெற வேண்டும்.
இருப்பினும், இந்த ஆண்டு 59 வயதுடைய மருத்துவர்கள் 2023 இல் 60 வயதை நிறைவு செய்த பிறகு ஓய்வு பெற வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.
பொதுத்துறை ஊழியர்களுக்கான கட்டாய ஓய்வு வயது சமீபத்தில் 60 ஆக திருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)