சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட கோழி இறைச்சியின் விலை ஓரளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சி 1,500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது.
எனினும், கோழி இறைச்சி கிலோ ஒன்று தற்போது 1,080 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக சந்தை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேள்விக்கான விநியோகம் இன்மையே சந்தையில் கோழி இறைச்சி மற்றும் முட்டைக்கான விலைகள் வெகுவாக அதிகரித்திருந்தன.
எவ்வாறாயினும், அதிக விலைக்காரணமாக கோழி இறைச்சி கொள்வனவு செய்வதில் மக்கள் நாட்டம் செலுத்துவதில்லை என அகில இலங்கை கோழி இறைச்சி வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.