புத்தளத்தில் சனிக்கிழமை (15) அன்று இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வாகனம் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
புத்தளம் - குருநாகல் வீதியில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவ மீது இராஜாங்க அமைச்சரின் வாகனம் மோதியதாக டெய்லி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
புத்தளம் முள்ளிபுரத்தைச் சேர்ந்த 46 வயதுடைய நபர், முதலில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும், உடல்நிலை மோசமடைந்ததால் குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இராஜாங்க அமைச்சரின் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாகனம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்பில்லாத விடயத்தில், நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக பிறப்பிக்கப்பட்ட கைது உத்தரவை அடுத்து இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த கடந்த வாரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான அழைப்பாணையின் பிரகாரம் நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றம் கடுமையாக எச்சரித்ததை அடுத்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். (யாழ் நியூஸ்)