உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினால் உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இன்றைய தினம் தங்கத்தின் விலையில் சிறிதளவு அதிகரிப்பு காணப்பட்ட போதிலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலையானது பாரியளவு அதிகரிக்கவில்லை.
இதற்கமைய நாட்டில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 6 இலட்சத்து 5 ஆயிரத்து 616 ரூபாவாக அமைந்துள்ளது.
24 கரட் தங்கம் ஒரு பவுனின் விலையானது ஒரு இலட்சத்து 70 ஆயிரத்து 900 ரூபாவாக அமைந்துள்ளது.
22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை ஒரு இலட்சத்து 56 ஆயிரத்து 750 ரூபாவாக அமைந்துள்ளது.
அத்துடன் 21 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை ஒரு இலட்சத்து 49 ஆயிரத்து 600 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.