12,000 திர்ஹம்களுக்கு சமூக ஊடகங்கள் ஊடாக கைக்குழந்தையொன்றை விற்க முயன்ற இலங்கைப் பெண் மற்றும் இருவர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
35 வயதான இந்தோனேசியப் பெண் ஒருவர் தனது பிறந்த குழந்தையை பணத் தேவைக்காக விற்க முயன்றதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
45 வயதுடைய இலங்கையர் உட்பட இரண்டு பெண்கள் அவருக்கு வாங்குபவரைக் கண்டுபிடிக்க உதவியுள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் 2 மாத குழந்தையை விற்பனை செய்வதாக ஆன்லைன் விளம்பரம் வெளியானதை அடுத்து துபாய் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விளம்பரத்தை இலங்கைப் பெண்ணே வெளியிட்டிருப்பது மேலும் தெரியவந்தது.
கடந்த வாரம் துபாய் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், மூவரும் மனித கடத்தல் வழக்கில் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது.
இதன்படி, சந்தேகநபர் ஒருவருக்கு மூன்று வருட சிறைத்தண்டனையும் 4,000 திர்ஹம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)