சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு வலயக் கல்விப் பணிப்பாளரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுற்றறிக்கையில் ஸ்ரீலால் நோனிஸ் தெரிவித்துள்ளார்.
ஆசிரியை-மாணவர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பாடசாலை வளாகத்தில் நடைபெற்ற சிறுவர்கள் தின நிகழ்வின் போது பாடசாலை சிறுவர்கள் குழுவுடன் பெண் ஆசிரியை நடனமாடியது தெரிய வந்தது என்றார். இதனால் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமில்லை என மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் ஸ்ரீலால் நோனிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
கதிரானில் உள்ள ஒரு பாடசாலையில் நடந்த இந்தச் சம்பவம், மக்கள் மற்றும் அரச நிறுவனங்களின் சில பிரிவுகளில் இருந்து விமர்சனங்களுக்கு உள்ளானது, இது கல்வி அதிகாரிகளின் விசாரணையைத் தூண்டியது. இந்நிலையில் இன்று இந்த சுற்றறிக்கை வெளியானது. (யாழ் நியூஸ்)